Shadow

நன்கொடை – வைப்பு நிதிகள்

  1. மாணவர்களுக்குரிய எட்டுப் போட்டிகளுக்கு 30 அறக்கட்டளைகள் ஆண்டு தோறும் உரு 250 வழங்கி வருகின்றனர். வே.பழனிச்சாமி என்பவர் பரிசுக்காக உரு 3500 வழங்கி வருகிறார். பொதுமக்களிடம் ஆண்டுக்கு ஐம்பதினாயிரம் நன்கொடை திரட்டப்படுகிறது.
  2. அமெரிக்காவிலுள்ள உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை மூலம் அதன் ஒருங்கினப்பாளர் வ.ச.பாபு மூலம் இரண்டு முறை ஆயிரம் டாலர் வீதம் இரண்டாயிரம் டாலர் கிடைத்துள்ளது.
  3. பாவாணர் கோட்ட வளர்ச்சிக்கும், பயிற்சி வகுப்புகளுக்கும், விருது வழங்கவும், போட்டிப் பரிசுகளும் வங்கி வைப்பு நிதி வழங்கியவர்கள்.
    1. ம.செ.தமிழ்மணி – மறைந்த மகள் தமிழிசை நினைவாக உரு 25,000
    2. பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைந்த மனைவி அன்னை சேது நினைவாக உரு 10,000
    3. புலவர் இரா.இளங்குமரனின் பெற்றோர் வாழவைத்தம்மை–படிக்க ராமு நினைவாக வழங்கியது உரு 5,000
    4. சென்னை, பாவலர் செவ்வியன் வழங்கியது உரு 5,000

ஏதிர்காலத்திட்டம்

  1. பாவாணர் வாழ்ந்த காலத்தில் எடுத்து மொழிந்த தென்மொழிக் கல்லூரிக்கு இடமும், பணமும் தமிழினச் செல்வர்கள் வழங்கினால் சிறப்பாய் நடத்துவது.
  2. பாவாணர் நெறியாளர்களின் தமிழர் வாழ்வியல் வளாகம் ஒன்றைக் கூட்டு முயற்சியில் உருவாக்குதல்
  3. பாவாணரின் 'எண்ணமும் எழுத்தும்' என்னும் கருத்தியல் கட்டுரைகளை ஆண்டுதோறும் குறுநூலாக வெளியிடுதல்
  4. பாவாணர் நூலகத்தையும், அரங்கத்தையும் விரிவாக்கம் செய்து உயிரோட்டமாக நடைபோடப்பாடுபடுதல்.
  5. 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்பதை அரசும், மக்களும், மாணவர்களும் செயல்படுத்த இயக்கம் நடத்துதல்.
தொடர்புக்கு

பாவாணர் கோட்டம்
223/2, பாவாணர் கோட்டச் சாலை
சோழபுரம் தெற்கு – 626 139,(வழி) இராசபாளையம், தமிழ்நாடு.